14 ஆண்டுகளுக்கு பின் மதுரை வரும் விஜய்... விமான நிலையத்தில் குவிந்துள்ள மக்கள்

 
ச் ச்

மதுரைக்கு வருகைதரும் த.வெ.க தலைவர் விஜய்யை காண ஏராளமான தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

தவெக தலைவர் விஜய் கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை 4 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வருகை தருகிறார். அவரை பார்ப்பதற்காக தவெக தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அதிகாலை முதலே மதுரை விமான நிலையத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் மதுரை விமான நிலையம் உள்ள வளாகத்திற்குள் அதிக கூட்டம் சேர்வதால் போலீஸார் விமான நிலையம் வெளி வளாகத்தில் அவர்களை தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

14 வருடங்களுக்கு பிறகு விஜய் மதுரை வருகிறார், மேலும் கட்சி தொடங்கிய பின் முதன் முதலில் மதுரைக்கு வருகிறார் என்பதால் ரசிகர்கள் அதிகளவில் கூட்டம் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விமான நிலையம் வெளிவளாகத்தில் தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் ஷேர் ஆட்டோ,இருசக்கர வாகனம், கார், ஆம்னி பேருந்து மூலம் வந்த வண்ணம் இருக்கின்றனர். போக்குவரத்திற்கு இடையூராக இருப்பதால் காவல்துறையினால் வாகனங்களை அப்புறபடுத்த சொல்வதால் பரபரப்பாக உள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் காவல்துறையினர் சோதனைக்கு பயணிகள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் விமான நிலையம் வெளிவளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.