தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் - தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

 
vijay vijay

10 மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பத்தாம் வகுப்பில் மொத்தம் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 95.88 சதவீதம் மாணவிகளும், 91.74 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,07,098 பேரில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.43% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர.  
10 மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்த வகுப்புகளில் மேலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு, கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள். தன்னம்பிக்கையோடு பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்து விளங்கிடவும், வாழ்வில் வெற்றி காணவும் வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.