தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் பிறந்த நாள் வாழ்த்து

 
vijay vijay

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக தொண்டர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இதேபோல், பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் கொண்டாடினார். 

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.