"விஜய் மீது எந்த வழக்கும் போடவில்லை"- தவெக வழக்கறிஞர்கள்

 
s s

தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. எனவே முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறோம் என தவெக தரப்பு வழக்கறிஞர் பேட்டியளித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக வழக்கறிஞர்கள், “தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே ஆனந்த், நிர்மல் குமார் முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் முன் ஜாமின் மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. மக்கள் மன்றம், நீதிமன்றத்தை நம்புகிறோம். தவெக தலைவர் விஜய் மீது எந்த வழக்கும் போடவில்லை. அதனால் அவருக்கு முன் ஜாமின் மனு தாக்கல் செய்யவில்லை. 

கரூர் துயர சம்பவத்தில் கைதான தவெக நிர்வாகிகளுக்கு அக்டோபர் 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது” என்றார்.