#BREAKING தவெகவில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாரை ஓரங்கட்ட விஜய் முடிவு

 
பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி - விஜய் அறிவிப்பு பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி - விஜய் அறிவிப்பு

நெருங்கிய நண்பர்களாகவும் ரசிகர் மன்ற தலைவர்களாகவும் இருந்து வந்த நம்பிக்கைக்குரியவர்களை 2ஆம் கட்ட தலைவர்களாக நியமிக்க விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தளபதிக்காக வேலையை விட்டு வருபவனே உண்மையான தொண்டன் - புஸ்ஸி ஆனந்த் சர்ச்சை  பேச்சு - தமிழ்நாடு

கரூரில் கடந்த மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு இதில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். 

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின்னர் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். அதன்படி, நெருங்கிய நண்பர்களாகவும் ரசிகர் மன்ற தலைவர்களாகவும் இருந்து வந்த நம்பிக்கைக்குரியவர்களை 2ஆம் கட்ட தலைவர்களாக நியமிக்க விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய நிர்வாகிகள் N.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ஜான் ஆரோக்கியசாமி என யாரும் இல்லாமல் அனைத்து கட்சி நடவடிக்கைகளையும் விஜய் தனியாக கையாண்டு வருவதாக கூறப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசவும் விஜய் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.