“என்னுடைய வேன், கார் பின்னாடி யாரும் பாலோ பண்ணாதீங்க; மனசுக்கு பதட்டமா இருக்கு”- விஜய்

 
ச் ச்

ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக தாண்டிக்கு செல்வதற்காக நடிகர் விஜய் மதுரை விமான நிலையம் புறப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய், “மதுரை மக்களுக்கு வணக்கம். உங்கள் அன்புக்கு கோடான கோடி நன்றி. ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்கிறேன். நான் எனது வேலையைப் பார்க்கப் போகிறேன், நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள். என்னுடைய வேன், கார் பின்னாடி யாரும் பாலோ பண்ணாதீங்க... பக்கில் வேகமாக வருவது, மேலே நின்னுக்கிட்டு பைக் ஓட்டுறது, ஹெல்மெட் இல்லாமல் வருவது போன்ற காட்சிகளை பார்க்க மனதுக்கு பதட்டமாக இருக்கிறது. விரைவில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன்” என்றார்.