வீடியோ காலில் மன்னிப்பு கேட்ட விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தாரிடம் விஜய் பேசியபோது, தனது மன்னிப்பை தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/media_files/2025/10/06/stampedevj-2025-10-06-10-01-58.jpg)
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறார். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார். இந்த வீடியோ கால் பேசும் போது, பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரியுமான அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்துள்ளனர்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தாரிடம் விஜய் பேசியபோது, தனது மன்னிப்பை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தம்பியை பறிகொடுத்த பெண் ஒருவர் அளித்த பேட்டியில், உங்கள் இழப்பு தாங்க முடியாத இழப்பு, என்னை (விஜய்) தம்பியாக நினைத்து கொள்ளுங்கள். என்மீது தப்புதான்; என்னை மன்னிச்சிடுங்க. வரமுடியாத சூழலில் போயிட்டேன். கோர்ட் ஆர்டர் வந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன் என விஜய் உருக்கமாக பேசியதாக தெரிவித்துள்ளார்.


