#BREAKING மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன் - விஜய்

 
ச் ச்

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்றுவரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய், “மக்களிடம் செல் என்று கூறிய அண்ணாவை மறந்தது யார்? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். தொழிற்சாலை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் பெறுகிறது. சட்டம், ஒழுங்கை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்.தவெகவினர் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களை தற்குறிகள் என அழைத்து வாங்கிக்கட்டி கொண்டனர். அறிவுத்திருவிழா என்ற பெயரில் அவதூறு திருவிழா நடத்தி நம்மை தற்குறிகள் என்கின்றனர். நடிகர் கட்சி என்ற அவதூறு இன்று ஆரம்பித்தது இல்லை. 53 ஆண்டுகளாக கூத்தாடி, நடிகர் கூட்டம் என தொடர்ந்து கதறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒட்டுமொத்த தமிழகமும் எம்ஜிஆர் பின் நின்றது. நமக்கு கொள்கை இல்லையாம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை கோட்பாட்டை அறிவித்த நமக்கு கொள்கை இல்லையா? எல்லாருக்கும், எல்லாமும் கிடைக்கணும், சமுக நீதி கிடைக்கணும், அந்த சமூகநீதி உண்மையான சமூகநீதியாக இருக்கணும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்ன நமக்கு கொள்கை இல்லையா?” என்றார்.