"நானே தலைமைச் செயலகத்திற்கு வருவேன்"- ஸ்டாலினுக்கு விஜய் சவால்

 
"நானே தலைமைச் செயலகத்திற்கு வருவேன்"- விஜய் பேச்சு "நானே தலைமைச் செயலகத்திற்கு வருவேன்"- விஜய் பேச்சு

பரந்தூர் விவசாயிகள், பொதுமக்களை அழைத்துக்கொண்டு நானே தலைமைச் செயலகத்திற்கு வருவேன் என தவெக தலைவர் விஜய் கூறினார்.


தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று ( வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. இதில் தவெக செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1200  பேருக்கு மட்டுமே நுழைவு அடையாள அட்டை  வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  காலை செயற்குழு கூட்டத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய், கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.  


செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், “முதல்வரே நீங்களே பரந்தூர் விவசாயிகளை நேரில் சந்தித்து விமான நிலையம் வராது என்று உறுதி கொடுங்கள், இல்லையென்றால் பரந்தூர் விவசாயிகளை நானே நேரில் அழைத்து வந்து உங்களை தலைமை செயலகத்தில் சந்திப்பேன். அப்படி ஒரு சூழலை நீங்க உண்டாக்க மாட்டீர்கள் என நான் நினைக்கிறேன், அதையும் மீறி ஒரு சூழல் வந்தால் நான் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
தலைமை செயலகத்தை முற்றுகையிடும்போது எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார். 1,005 குடும்பங்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு சாதாரணமா போச்சா..! அந்த மக்களும் நம்ம மக்கள் தானே..!
எங்கள் மதிப்புமிக்க தலைவர்களை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய நினைத்தால் அதில் பா.ஜ.க. ஒருபோதும் வெற்றி பெற முடியாது” என்றார்.