ரூ.4,730 கோடி கொள்ளை அடித்துள்ளனர்... எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? - விஜய்
தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் திமுகவுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. எந்த வாய்க்கால் வரப்பு தகராறும் கிடையாது. அப்படியே இருந்தாலும் அதை கண்டுகொள்ளப் போவதில்லை. அவர்களுக்கு வேண்டுமானால் நம் மீது வன்மத்தோடு இருக்கலாம். ஆனால், நமக்கு அப்படி இல்லை என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், “ஜீவநதியான பாலாற்றை சுரண்டிவிட்டனர். நாசம் செய்துவிட்டனர். அழித்துவிட்டனர். பாலாற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 22.70 லட்சம் யூனிட் அதிகம் மணல் அள்ளினர். பாலாற்றில் மணல் கடத்தல் மூலம் ரூ.4,730 கோடி கொள்ளை அடித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் திமுகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. மக்களை பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுகவை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? எந்த பிரச்னையும் கிடையாது. எந்த வாய்க்கால் வரப்பு தகராறும் கிடையாது. அப்படியே இருந்தாலும் அதை கண்டுகொள்ளப் போவதில்லை. அவர்களுக்கு வேண்டுமானால் நம் மீது வன்மத்தோடு இருக்கலாம். ஆனால், நமக்கு அப்படி இல்லை
நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்... அண்ணா ஆரம்பிச்ச அந்த கட்சிய அதற்கப்புறம் கைப்பற்றுனவங்க என்னலாம் பண்றாங்க. இந்த விஜய் சும்மா எதையும் சொல்ல மாட்டேன். ஒன்னு சொன்னா அதை செய்யாம விட மாட்டான். கரூர் விவகாரம் பத்தி பேசுவோம்னு நினைச்சிருப்பாங்க , அத நான் அப்புறம் பேசுறேன். தற்குறிகள் என நீங்கள் கூறியவர்கள்தான் உங்களின் தலையெழுத்தை மாற்றி எழுதப் போகிறார்கள். இவர்கள் தற்குறிகள் அல்ல, தமிழ்நாட்டுஅரசியலை மாற்றப்போகும் ஆச்சரிய குறிகள். குறிவைத்தால் தவறமாட்டேன். தவறினால் குறியே வைக்க மாட்டேன் என எம்ஜிஆர் வசனம் பேசியிருப்பார். இந்த எம்ஜிஆர் வசனம் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும்” என்றார்.


