"நான் அரசியலுக்கு வந்ததிலிருந்து பல வதந்திகள் பரப்பப்படுகிறது"- விஜய்

 
s

நான் அரசியலுக்கு வந்ததிலிருந்து பல வதந்திகள் பரப்பப்படுகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.


செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அட்டை வழங்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் உள்ளே சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள வீடியோ கண்காணிப்பு குழு (Video Surveillance Team) தொண்டர்கள் உள்ளே செல்லும் காட்சிகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்தனர்.

தொடர்ந்து விஜய் தலைமையில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய விஜய், “எங்களது மதசார்பற்ற நிலைப்பட்டில் எந்த மாற்றமும் இல்லை. மதச்சர்பாற்ற சமூக நீதிக் கொள்கையை எந்த நிலையிலும் கைவிட மாட்டோம்.. தவெக யாரிடமும் கூட்டணி இல்லை, நம்முடைய தலைமையில் தான் ஆட்சி என்பதிலும் உறுதியாக உள்ளோம். நான் அரசியலுக்கு வந்ததிலிருந்து பல வதந்திகள் பரப்பப்படுகிறது. விக்கிரவாண்டி மாநாட்டில் சொன்னதைப் போல மதச்சார்பற்ற கொள்கையில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை எதற்காகவும் யாருக்காகவும் அரசியலில் நாம் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை; யார் என்ன சொன்னாலும் நம்பாதீர் ” என்றார்.