பாஜகவை எதிர்க்க வேண்டாம் என விஜய் முடிவு- கைமாறிய ரூ.300 கோடி! பரபரப்பு பின்னணி

 
vijay

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பாஜகவை எதிர்க்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

vijay

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. கட்சி தொண்டர்களுக்கே முன்னுரிமை என விஜய் முன்பு கூறியிருந்தாலும், தற்போது காட்சிகள் தலைகீழாக மாறியுள்ளன. காரணம் விசிகவில் இருந்து வந்த ஆதவ் அர்ஜுனா , அதிமுகவில் இருந்து வந்த நிர்மல் குமார் போன்றவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆதவ் ஏற்பாட்டில் வரவழைக்கப்பட்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு கட்சி சார்பான மேடையிலும் தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து தற்போது வரை விஜய்க்காக உழைத்து கொண்டிருக்கும் பல்வேறு நபர்களையும் கொச்சைப்படுத்தியதாகவே பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய விஜய், “பண்ணையார்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்” எனக் கூறினார். இதுவரை களத்தில் இறங்கி மக்களை சந்திக்காமல் பனையூரில் இருந்து கொண்டு அரசியல் செய்து வரும் விஜய், பண்ணையார் அரசியலைப் பற்றி பேசலாமா? சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. அதுமட்டுமின்றி மும்மொழி கொள்கைக்கு எதிராக அண்மையில் அறிக்கையெல்லாம் விட்ட விஜய், அதுகுறித்தோ,  தமிழ்நாட்டின் கல்வி நிதியை நிறுத்தி வைத்திருக்கும் பாஜக அரசை கண்டித்தோ மேடையில் மூச்சே விடவில்லை. பாஜக என்ற வார்த்தையையோ , இந்தி என்ற வார்த்தையையோ கூட உச்சரிக்காமல் Bro, Bro என டீசண்ட் அரசியலை நகர்த்தி சென்றுவிட்டார். விக்ரவாண்டி முதல் மாநாட்டில் தங்களின் கொள்கை தலைவர்களையும், மொழிக்கொள்கையையும் அறிவித்து முழங்கிய விஜய் தற்போது அந்த கொள்கைகளுக்கே ஆபத்து நேரும் போதும் அமைதியாக வேடிக்கை பார்ப்பது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

adhav

இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் ஒருவரிடம் கேட்கையில் அவர், “கடந்த ஆண்டு இருந்த விஜய்யின் மனநிலையும் தற்போதுள்ள மனநிலையும் ஒன்றல்ல, அன்று அவர் தமிழ் தேசியத்தையும் , திராவிட அரசியலையும் இரு கண்களாக வைத்து செயல்படுவோம் என்றார். அதன்படி பார்த்தால், மும்மொழி என்ற பெயரில் இந்தி திணிப்பு முயற்சி திராவிடம் ,தமிழ் தேசியம் இரண்டிற்குமே எதிரானது தான். அதை கடுமையாக எதிர்க்க வேண்டிய விஜய் அமைதியாகவும் காமெடி செய்தும் நகர்கிறார். சரி மும்மொழி கொள்கையை பற்றிதான் பேசவில்லை, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற விவகாரத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைக்கபட்டு நமது அரசியல் உரிமையே பறிக்கப்படும் என பல்வேறு கட்சியினரும் கதறிக்கொண்டிருக்கும் சூழலில், அதுபற்றியும் விஜய் வாய்த்திறக்கவில்லை. இதெல்லாம் வைத்து பார்க்கும் போது திமுகவை மட்டும் எதிர்ப்பது தான் விஜய்யின் நோக்கம் என தெரிகிறது. பாஜகவை பகைத்துக்கொள்ள விஜய் விரும்பவில்லை என தெரிகிறது. பாஜகவை எதிர்க்காமல் அரசியல் செய்வேன் என்பது அரசியல் கோமாளித் தனம்” என்றார்.


ஆதவ் வருகைக்கு முன் தவெக, வருகைக்குப் பின் தவெக என பார்த்தால், விஜய்யின் நிலைபாட்டில் பல்வேறு வேறுபாடுகள் தெரிகின்றன. உதாரணமாக ஆதவ் வருகைக்கு முன் திமுக , பாஜக எதிர்ப்பு , அதிமுக வோடு நட்பு என்ற வகையில் செயல்பட்ட விஜய் தற்போது, பாஜகவை எதிர்க்க வேண்டாம் , திமுகவை மட்டும் எதிர்ப்போம் என்ற நிலைபாட்டுக்கு வந்திருக்கிறார். இதற்கு காரணம்  ஆதவ் மூலம் கைமாறப்பட்ட 300 கோடி ரூபாய். அதிமுகவிற்கு செல்வதாக இருந்த ஆதவ்வை தவெக பக்கம் இழுத்து போட்டதே பாஜக தான். தற்போது அதே ஆதவ்வை கொண்டு காய் நகர்த்திவருகிறது. அந்த 300 கோடி எதற்கு தெரியுமா? தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் செலவு, அரசியல் செலவு என சுமார் 300 கோடிக்கான செலவுகளுக்கு ஆதவ் பொறுப்பேற்றுள்ளார். ஆகவே இனி விஜயிடம் இருந்து தப்பி தவறி கூட பாஜக எதிர்ப்பு பேச்சு வராது.