“சி.எம் சார் உங்களுக்கு ஏதாவது பழி வாங்கணும்னு தோணுச்சுனா என்னை என்ன வேணும்னா பண்ணுங்கனு”- விஜய்
சி.எம். சார் பழி வாங்க வேண்டுமென எண்ணம் இருந்தால் நான் வீட்டியோ, அலுவலகத்திலோ இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

CM சார்..என்னை என்ன வேணாலும் பண்ணுங்க..அவங்கள விட்ருங்க..
— Top Tamil News (@toptamilnews) September 30, 2025
கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ#Karur #KarurTragedy #TVKVijay pic.twitter.com/0SJI9tMyqF
கரூர் கூட்டநெரிசல் சம்பத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் விஜய், “நடக்க கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே. அந்த நேரத்தில் இத்தனை பேர் பாதிக்கப்பட்ட போது அங்கிருந்து என்னால் வரமுடியும். அங்கு செல்ல எண்ணம் இருந்துச்சு. ஆனால் அங்கு போனால் வேறு எதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பயத்தில் போகவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும். குடும்பத்தினரை இழந்து தவிப்போருக்கு ஆறுதல் கூறுகிறேன். கிட்டதட்ட 5 மாவட்டங்களுக்கு சென்றோம். அங்கெல்லாம் எதுவும் நடக்கவில்லை. கரூரில் மட்டும் அசம்பாவிதம் ஏன் நடக்கணும். மக்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும். சீக்கிரம் உண்மைகள் அனைத்தும் வெளிவரும். என் தொண்டர்கள் மீது கை வைக்க வேண்டாம். எங்களுக்கு தந்த இடத்தில் நாங்கள் பேசினோம்.எம். சார் பழி வாங்க வேண்டுமென எண்ணம் இருந்தால் நான் வீட்டியோ, அலுவலகத்திலோ இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.


