ஸ்டாலின் ‘ம்’ சொன்னால்தான் விஜய் முதல்வர்!!
எந்த திமுகவை எதிர்த்து தனது முழு அரசியலையும் விஜய் செய்து வந்தாரோ இன்று அதே திமுக ஆதரவு கொடுத்தால் தான் தன்னால் ஆட்சி அமைக்க முடியும் என்ற இடத்திற்கு வந்திருக்கிறார்.
![]()
தமிழக கவர்னர் அர்லேகரை சந்தித்து, விஜய் நேற்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர், த.வெ.க.வின் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார்.ஆனால் அதை பெற்றுக்கொண்ட கவர்னர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநரை இன்று மீண்டும் சந்தித்தார். சந்திப்பு முடிந்த சில நிமிடங்களில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை காட்டவில்லை அதனால் அவரை ஆட்சி அமைக்க அழைக்க முடியவில்லை என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்தது.
இந்நிலையில் எந்த திமுகவை எதிர்த்து தனது முழு அரசியலையும் விஜய் செய்து வந்தாரோ இன்று அதே திமுக ஆதரவு கொடுத்தால் தான் தன்னால் ஆட்சி அமைக்க முடியும் என்ற இடத்திற்கு வந்திருக்கிறார். விஜய் அவர்கள் திமுக கூட்டணி கட்சிகளிடம் தான் தனக்கான ஆதரவையும் கேட்கிறார்... திமுகவும் உங்களுக்கு விருப்பமிருந்தால் செல்லுங்கள் என சொல்லிவிட்டார்கள். இருந்தாலும் கொள்கை கூட்டணி என்பதால் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் (காங்கிரஸ் தவிர) விலகிப் போக தயங்குகின்றன. ஐயூஎம்எல் கட்சி கூட திமுக தலைவர் சொல்வதை தான் நாங்கள் கடைபிடிப்போம் என கூறிவிட்டது. இருந்தாலும் திமுக தலைவர் ஸ்டாலின் அழுத்தமாக நீங்கள் செல்லுங்கள் என சொல்லிவிட்டால் அவர்கள் கிளம்பி விடுவார்கள். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் முதல்வர் கனவு தற்பொழுது திமுக மற்றும் அதன் தலைவர் ஸ்டாலின் கைகளில் உள்ளது. முன்னதாக ஸ்டாலின், தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக இடையூறு செய்யாது, அரசியலமைப்பு நெருக்கடியையோ அல்லது மற்றொரு தேர்தலையோ திமுக விரும்பவில்லை என முதிர்ச்சியுடன் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

