இன்னும் 25 நாட்கள் தான்...! முழு நேர அரசியலில் களமிறங்கும் விஜய்!

 
vijay vijay

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் விஜய் இன்னும் 25 நாட்களில் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வருகிற 2026ம் ஆண்டு தான் தனது இலக்கு என அறிவித்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றி கழகத்தில் இதுவரை 120க்கும் மேற்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் விஜய் இன்னும் 25 நாட்களில் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக தலைவர் விஜய் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்களில் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை முடித்த கையோடு பூத் கமிட்டி மாநாடு, சுற்றுப்பயணம், மண்டல மாநாடு, பொது கூட்டங்களை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.