தவெக தொண்டர் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழப்பா?- ரயில்வே சொன்ன அதிர்ச்சி தகவல்
தவெக மாநாட்டிற்கு வந்தவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பரவும் தகவல் உண்மையல்ல என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு மேடையின் பின்புறம் ரயில் வழித்தடத்தில், ரயில் மெதுவாக சென்றபோது கீழே குதித்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சென்னையில் இருந்து மாநாட்டுக்காக சென்ற நிதிஷ் குமார் (21) என்பவர் உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது.
மாநாட்டு பந்தலை பார்த்த பலர் ஆர்வமிகுதியில் ரயிலில் இருந்து குதித்தபோது தவறி விழுந்து நிதிஷ் குமார் என்பவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தவெக மாநாட்டிற்கு வந்தவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பரவும் தகவல் உண்மையல்ல என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டையை சேர்ந்த நித்திஷ் என்பவர் சொந்த ஊருக்கு சென்றபோது ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார் என்றும், தற்போது முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.