“விஜய் மாமா ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அடம்பிடியுங்கள் குழந்தைகளே..”

 
s

குட்டீஸ்களே.. உங்களுக்கு ஏதாவது வேணும்னா அடம்பிடிச்சு அதை சாதிக்கிறீங்கல்ல. அதே மாதிரி இந்த `விஜய் மாமா' ஜெயிக்கறதுக்காக உங்க வீட்டுல இருக்குற பெரியவங்களை விசிலுக்கு ஓட்டு போட வைங்க என தவெக தலைவர் விஜய் கூறினார்.


சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறும் தவெக கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “விஜய் மாமா ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, இந்த தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அடம் பிடியுங்கள் குழந்தைகளே... சாக்லேட் வேண்டும் என அடம்பிடிப்பதை போல் தவெகவிற்கு ஓட்டு போடுங்கள் என அடம்பிடியுங்கள் குழந்தைகளே... வீட்டில் யாராவது ஓட்டு போடாமல் இருந்தால் அன்பாக காதிலேயே விசில் ஊதி ஓட்டுப்போட வையுங்கள். இனி விஜயை என்னை யாரும் ‘தளபதி விஜய்’ என்று அழைக்க வேண்டாம்… ‘மாமா விஜய்’ என்று அழைக்க வேண்டும்.” என்றார்.