மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற விஜய்
Updated: May 11, 2026, 15:19 IST1778492999769
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்தார் முதல்வர் விஜய்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்றார் விஜய். முதல்வர் விஜய்யை வீட்டு வாசலில் ஆரத்தழுவி வரவேற்று உள்ளே அழைத்து சென்றார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின். அன்பில் மகேஷ், எழிலன் நாகநாதன் உள்ளிட்டோரும் விஜய்யை வரவேற்றனர். விஜய்க்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் மு.க.ஸ்டாலின். மரியாதை நிமித்தமான சந்திப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய்- ஸ்டாலின் சந்திப்பின்போது தங்கம் தென்னரசு, சேகர்பாபு, சக்கரபாணி, ஐ.பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

