தவெக தேர்தல் அறிக்கையில் என்ன வேண்டும்?- கருத்துக்களை மின்னஞ்சலில் வழங்கலாம்!
Feb 5, 2026, 20:11 IST1770302507680
தவெக-வின் தேர்தல் அறிக்கைக்கு உங்கள் பரிந்துரைகளை வழங்க இணையதளத்தில் நெரிசல் ஏற்படுவதால், மாற்று ஏற்படாத மின்னஞ்சல் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தவெக தலைமை தனது எக்ஸ் தளத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாகப் பொதுமக்களும் தங்களின் மேலான பரிந்துரைகளை இணையத்தளத்தின் வாயிலாகக் கழகத்திற்குத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட அந்த இணையத்தளமானது ஒரே நேரத்தில் அதிகப்படியாகப் பயன்படுத்தப்படுவதால், ஸ்தம்பித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கலாம். tvkmanifesto2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் பரிந்துரைகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


