17 வயது சிறுமியை கர்ப்பமாக்கி குழந்தையை எரித்து கொன்ற இளைஞர்! கருக்கலைப்பில் முடிந்த காதல்
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கி குழந்தையை எரித்துக் கொன்ற சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த மதுராம்பட்டு கிராமத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (வயது 24). தற்பொழுது தனியார் வாட்டர் கேன் கம்பெனியில் வாட்டர் சப்ளை செய்து கொண்டிருக்கிறார். இவர் அந்த கிராமத்தின் பிளேபாயாக வலம் வந்துள்ளார். இவர் 17 வயது சிறுமியை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் பலமுறை சந்தித்து பழகி உள்ளார். இதனால் கர்ப்பமான சிறுமி தான் கர்ப்பமான தகவலை கல்யாணசுந்தரத்திடம் கூற அவர் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் 7 மாதம் கர்ப்பம் கலைத்துவிட்டு பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனை உண்மையென நம்பிய சிறுமி கல்யாணசுந்தரத்துடன் இணைந்து வயிற்றில் உள்ள கருவைக் கலைக்க கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தில் உள்ள சாய் கிளினிக்கை அணுகி உள்ளனர்.
இந்நிலையில் சாய் சிவா கிளினிக் என்ற தனியார் மருந்தகத்தில் அண்மையில் 7 மாத குழந்தையை கருவை கலைத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே கல்யாணசுந்தரத்தின் உறவினரை அணுகிய போது அவர் திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் 17 வயது சிறுமியின் உறவினர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் சங்கராபுரம் பகுதியில் விசாரணை மேற்கொண்டதில் 7 மாத குழந்தையயின் கருவை கலைத்து கொன்று எரித்து விட்டதாகவும் தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து சாய் சிவா கிளினிக் உரிமையாளர் சிவா ஆனந்த் மற்றும் உடந்தையாக இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று தேவபாண்டலம் இடுகாட்டில் குழந்தையை எரித்துக் கொன்ற இடத்தை திருவண்ணாமலை மாவட்ட தடயவியல் நிபுணர்கள் தடயத்தை சேகரித்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கல்யாணசுந்தரத்தை கைது செய்து விசாரணை மேற்கண்டனர். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கல்யாண சுந்தரத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர் மேலும் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பகுதியில் உள்ள சாய் சிவா கிளினிக்கின் உரிமையாளர் சிவா ஆனந்த், செவிலியர் உள்பட 3 பெண்களை கைது செய்து இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கருக்கலைப்பு தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


