புயல் பாதிப்பு - முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி வழங்கிய டிவிஎஸ் நிறுவனம்

 
tvs

மிக்ஜாம்' புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு டிவிஎஸ் நிறுவனம் 3 கோடி ரூபாய் நிவாரண வழங்கியது.

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை, வெள்ளத்தால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கோடிக்கனக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதனிடையே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் தாராளமாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். 

stalin

இந்த நிலையில், டிவிஎஸ் நிறுவனம் நிவாரண 3 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளது. மிக்ஜாம்' புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு டிவிஎஸ் நிறுவனம் 3 கோடி ரூபாய் நிவாரண வழங்கியது. டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அதற்கான காசோலையை வழங்கினார்.