பணியின்போது தூங்கிக் கொண்டிருந்த 2 கேட் கீப்பர்கள் டிஸ்மிஸ்!

 
2 gatekeepers dismissed for sleeping on duty 2 gatekeepers dismissed for sleeping on duty

அரக்கோணம் அருகே பணியின்போது தூங்கிய இரண்டு கேட் கீப்பர்களை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணி நேரத்தில் தூங்கியதால்: அரக்கோணம் அருகே ரயில்வே கேட் கீப்பர்கள் பணியிடை  நீக்கம்! railway

அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில்வே இருப்புபாதை வழித்தடத்தில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட்டில் பணியின் போது தூங்கிய இரண்டு் கேட் கீப்பர்களை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே உத்ரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே லெவல் கிராசிங் கேட் கீப்பர் தூங்கியதால் ரயில் மோதி பள்ளி வேனில் சென்ற முன்று மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். இதன் எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் செங்கல்பட்டு ரயில் பாதையில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட்களில் நேற்று நள்ளிரவு சென்னை கோட்ட ரயில்வே மேற்கு பகுதி முதுநிலை பொறியாளர் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். 


அப்போது சேந்தமங்கலம் லெவல் கிராசிங் கேட் எண்.40 ன் கேட் கீப்பர் அசிஷ்குமார், மற்றும் அரிகலபாடி லெவல் கிராசிங் LC.44 கேட் கீப்பர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் பணியின்போது தூங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரை தெற்கு ரயில்வே சென்னை கோட்ட நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொதுமக்களின் நலன் கருதி லெவல் கிராசிங் கேட்களில் ஆய்வு தொடரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்கள்.