பாலியல் தொழிலாளியிடம் கொள்ளையடித்த 2 இந்தியர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை - 12 சவுக்கடி தண்டனை..!
சிங்கப்பூரில் இந்தியர்கள் 2 பேர், பாலியல் தொழிலாளியை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, சிங்கப்பூர் நீதிமன்றம் அவர்களுக்கு 5 ஆண்டுகள் 1 மாதம் சிறைத்தண்டனையும் 12 பிரம்படியும் விதித்தது.
ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் (27) ஆகியோர் தங்கள் கோடை விடுமுறையைகழிப்பதற்காக கடந்த ஏப்ரல் 24-ந்தேதி சிங்கப்பூர் சென்றுள்ளனர். அப்போது, பாலியல் தொழிலாளயிடம் சென்ற இருவர், அப்பெண்ணை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை திருடியுள்ளனர்.
அவர்கள் லிட்டில் இந்தியா பகுதிக்கு சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களிடம் வந்து, “பாலியல் தேவைகளுக்காக பெண்கள் வேண்டுமா?” என்று கேட்டுள்ளார். அவரிடம் 2 இளம்பெண்களின் தொலைபேசி எண்களை அந்த நபர் பெற்றுள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. 2 பெண்களையும் அழைத்து அவர்களிடம் இருந்து பணத்தை திருட ஆரோக்கியசாமியும், ராஜேந்திரனும் திட்டமிட்டனர்.
இதன்படி முதலாவதாக ஒரு பெண்ணை போனில் அழைத்து, மாலை 6 மணியளவில் ஒரு ஹோட்டல் அறையில் ஒரு பெண்ணைச் சந்திக்க அவர்கள் ஏற்பாடு செய்தனர்.
அறைக்குள் நுழைந்ததும், அந்த பெண்ணின் கைகளையும் கால்களையும் துணிகளால் கட்டி, அவளை அறைந்து, அவளது நகைகள், 2,000 சிங்கப்பூர் டாலர் ரொக்கம், பாஸ்போர்ட் மற்றும் வங்கி அட்டைகளை கொள்ளையடித்தனர்.அன்று இரவு, இரவு 11 மணியளவில், இரண்டாவது பெண்ணுடன் வேறொரு ஹோட்டலில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தனர்.அவரிடமும் பணம், நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி ஆரோக்கியசாமி மற்றும் ராஜேந்திரனை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, பாலியல் தொழிலாளிகளை தாக்கி பணம் பறித்ததை ஒப்புக் கொண்டனர். இதனிடையே, கோர்ட்டில் தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என இருவரும் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் அவர்களது கோரிக்கைகளை ஏற்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. சிங்கப்பூரில் கொள்ளை சம்பவத்தின்போது காயம் ஏற்படுத்தும் குற்றவாளிகளுக்கு 5 முதல் 20 வருடங்கள் வரை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இதன்படி ஆரோக்கியசாமி மற்றும் ராஜேந்திரனுக்கு தலா 5 ஆண்டுகள் சிறையும், 12 சவுக்கடிகளும் தண்டனையாக விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


