வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் இருவர் உயிரிழப்பு

 
தொடரும் மரணம்; வெள்ளியங்கிரி மலையில் டிரெக்கிங் சென்ற பிரெஞ்சுக்காரர் உயிரிழந்தார் தொடரும் மரணம்; வெள்ளியங்கிரி மலையில் டிரெக்கிங் சென்ற பிரெஞ்சுக்காரர் உயிரிழந்தார்

கோவை வெள்ளிங்கிரி மலை ஏறிய பெண் உட்பட இரண்டு பக்தர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில்,  மலையற்றத்திற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒருவர் மயங்கி விழுந்து பலி

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில்,  கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும் இன்று மாவட்டத்திற்கு ரெட் அலார்ட்  விடப்பட்டுள்ள நிலையில்,  காலையிலிருந்து பூண்டி வனப்பகுதியில்  மழையின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை வெள்ளிங்கிரி மலை ஏற்றத்திற்கு சென்ற காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த கௌசல்யா (45), என்ற பெண் ஏழாவது மலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்த வன ஊழியர்கள் மற்றும் அவசரகால மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதே போல் ஐந்தாவது மலையில் வந்து கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் (32) என்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

இருவரின் உடலையும் வனத்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் அடிவாரத்திற்கு எடுத்து வரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதனிடையே தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் வெள்ளிங்கிரி மலை ஏற்றத்திற்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு ஏற்கனவே மேலே உள்ள பக்தர்களை கீழே அழைத்து வரும் பணியும் நடைபெற்று வருகிறது.