அதிவேக பயணம்- தவெக நிர்வாகி உட்பட இருவர் பலி
தவெக நிர்வாகியின் அதிவேக பயணத்தால் முன்னாள் சென்ற வாகனத்தின் மீது மோதியதில் தவெக நிர்வாகி உள்பட இருவர் பலியாகினர்.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த கருநீலம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (22). இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) கிளை நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வந்துள்ளார். ஸ்ரீதர் தனது ஆர்.ஒன்.5 ரக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சிங்கபெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோதுமுன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் பொருத்தியமூன்று சக்கர வாகனத்தின் மீது ஸ்ரீதரின் பைக் எதிர்பாராத விதமாக மிகவேகமாக மோதியது. இதில் முன்னாள் சென்று கொண்டிருந்த தெரு தெருவாக சென்று பழைய இரும்பு, பேப்பர் தகரம் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்துவந்த காயலாங்கடை வியாபாரி கோவிந்தராஜ் (45) என்பவரும் தாவெக நிர்வாகியுமான ஸ்ரீதரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ஸ்ரீதர் மற்றும் கோவிந்தராஜ் ஆகிய இருவருமே ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விதிகளை மீறியதால் ஏற்படும் பேரழிவிற்கு ஒரு சாட்சியாகும். 22 வயதே ஆன ஒரு இளைஞரின் எதிர்காலம் ஒரு நொடிப் பொழுதில் முடிந்து போனது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

