டீக்கடை வாசலில் டீ குடித்து கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி இருவர் பலி
வேதாரண்யம் அருகே டீக்கடை வாசலில் டீ குடித்து கொண்டு இருந்தவர்கள் மீது கார் மோதி இருவர் பலியான சம்ப்ம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நீர்முளை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே இன்று காலை டீக்கடை வாசலில் நீர்முளையை சேர்ந்த ராஜாங்கம், கோவிந்தராஜ் ஆகிய இருவரும் டீ கடை வாசலில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கேரளாவிலிருந்து வேளாங்கண்ணிக்கு வந்து கொண்டிருந்த இனோவா சொகுசு கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டையிழந்து டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜாங்கம், கோவிந்தராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தலைஞாயிறு காவல்துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இனோவா காரை கைப்பற்றி காரை ஓட்டி வந்த கேரளாவை சேர்ந்த ஓட்டுனர் சுஜிமனை போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


