"ஏட்டுச்சுவடிகளை அலைந்து திரிந்து அச்சிலேற்றித் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில்..." முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!!

 
stalin

தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் பல அரிய தமிழ் சுவடிகளைத் திரட்டி தொகுத்து தமிழ் இலக்கியத்திற்கு அரும்பணி ஆற்றியவர்.  உவேசா பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க இலக்கிய நூல்கள் பலவற்றையும், தமிழ் விடு தூது போன்ற வேறு பல அரிய தமிழ் நூல்களையும் அச்சு வடிவில் எதிர்கால தலைமுறையினருக்கு கொண்டு சென்றவர். இவரது நினைவைப் போற்றும் வகையில் திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம் அவர் வாழ்ந்த இல்லம் அரசால் நாட்டுடமையாக்கப்பட்ட பராமரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன்  தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் உவேசாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தமிழ் தாத்தா உவே சாமிநாதனின் 168வது பிறந்த நாளையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் சுப்பிரமணியன்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

tn

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்த் தொன்மையின் அடையாளங்களான சங்க இலக்கியங்கள்; சமணம், பவுத்தக் காப்பியங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச்சுவடிகளை அலைந்து திரிந்து அச்சிலேற்றித் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் நிலைபெற்றிட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் தொண்டைப் போற்றுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "சுவடிகளில் புதைந்து கிடந்த பழந்தமிழ் நூல்களை எல்லாம் கால்கள் தேயத்தேய நடந்து, தேடி எடுத்து நமக்கு தந்த தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த நாள் இன்று! உலகின் மூத்த மொழியான நம் தாய் தமிழுக்கு பெருமை சேர்த்த அப்பெருமகனின் தொண்டினை எந்நாளும்  போற்றிடுவோம்!"  என்று குறிப்பிட்டுள்ளார்.