உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தது!

 
uttarkhand uttarkhand

நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம்நடைமுறைக்கு வந்தது.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த விடமாட்டோம் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் தெரிவித்து வருகின்றன. இருந்த போதிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் நாட்டிலேயே முதல்முறையாக இன்று முதல் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

உத்தரகாண்டில் பழங்குடியினா் தவிர்த்து மற்ற அனைவருக்கும் பொது சிவில் சட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம்  வழிவகுக்கிறது. திருமணப் பதிவு மட்டுமின்றி, திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்வோரும் முறையாகப் பதிவு செய்வது கட்டாயம் ஆகும்.