ஜார்கண்ட் முதல்வரை கைது செய்த அமாலாக்கத்துறை - உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

 
Udhayanidhi

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள்ளார். 

நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக பதியப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், அவரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்தது. சுமார் 6 மணிநேர விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறையின் கஸ்டடியிலேயே ஆளுநர் மாளிகைக்கு சென்று ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.


இந்த நிலையில், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாராளுமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பாசிஸ்டுகள் எதிர்க்கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து கொடூரமான வழிகளையும், முயற்சிகளையும் பயன்படுத்துகின்றனர். பாசிஸ்டுகளின் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நமது தேசத்தின் குடிமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 2024 மக்களவை தேர்தலில் மக்கள் உறுதியாக செயல்பட்டு பாசிஸ்டுகளை தூக்கி எறிவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.