விஜய்க்கு போட்டியாக கோவையில் உதயநிதி ரோடு ஷோ!
கோவையில் ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவையில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக கோவை சென்றடைந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், அவினாசி ரோட்டில் ரோடு நடத்தினார். கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.10 கோடி செலவில் ஹாக்கி மைதானம் அமையவுள்ளது.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றுவரும் நிலையில், இந்த பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்வதற்கா சென்றஅக்கட்சியின் தலைவர் விஜய், இரண்டாம் நாளாக இன்றும் ரோடு ஷோ நடத்தினார்.


