புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள்- உதயநிதி ஸ்டாலின்

 
udhayanidhi stalin vijay

புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய்  தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் ,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

vijay

இந்த நிலையில், புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு பாராட்டுகள்.
விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும். இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமாலும் கட்சி தொடங்க உரிமை உள்ளது என கூறினார்.