மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட உதயநிதி ஸ்டாலின்
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்க விடுதி மாணவர்களுடன் அமர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மதிய உணவருந்தினார்.
தேனி மாவட்டம் கரகபொட்டலில் 53 பழங்குடியினருக்கு நில ஒதுக்கீடு செய்து, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணையும் பட்டாக்களையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்க விடுதி மாணவர்களுடன் அமர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மதிய உணவருந்தினார்.
இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய உத்தரவின் பேரில், சிவகங்கை மாவட்ட விளையாட்டு விடுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டோம். விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினோம். நாம் சென்ற நேரம் மதிய உணவு சாப்பிடும் நேரம் என்பதால், உணவுக்கூடத்திற்குச் சென்று மாணவர்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தோம். மேலும் தங்குமிடம் - குளியல் மற்றும் கழிவறை வசதிகளையும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


