'அயராது உழைப்பேன் என்ற உறுதியோடு பணிகளைத் தொடர்கிறேன்' - உதயநிதி ஸ்டாலின்..!
முதலமைச்சரின் எதிர்ப்பார்ப்பையும், நம்பிக்கையையும் நிறைவேற்றும் வகையில் அயராது உழைப்பேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் பொறுப்பை நேற்று வழங்கப்பட்டது. புதிய துணை முதலமைச்சராகப் பதவி உயர்வு பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் பெருமக்கள், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனக்குத் துணையாக அல்ல; நாட்டு மக்களுக்குத் துணையாக அவர் இருக்கப் போகிறார்! மிகுந்த நம்பிக்கையோடு நமக்கு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இதற்கு நன்றி தெரித்துள்ள உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் எதிர்ப்பார்ப்பையும், நம்பிக்கையையும் நிறைவேற்றும் வகையில் அயராது உழைப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், “தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றும் வாய்ப்பைத் தந்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். நம் முதலமைச்சர் அவர்களின் எதிர்பார்ப்பையும் – நம்பிக்கையையும் நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக - மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் இணைந்து அயராது உழைப்பேன் என்ற உறுதியோடு பணிகளைத் தொடர்கிறேன். தமிழ்நாடு வெல்லட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகச் சிறப்பாகச் செயல்படும் திரு. @Udhaystalin அவர்களுக்குத் துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனக்குத் துணையாக அல்ல; நாட்டு மக்களுக்குத் துணையாக அவர் இருக்கப் போகிறார்!
— M.K.Stalin (@mkstalin) September 29, 2024
அமைச்சரவையில் இணைந்துள்ள @V_Senthilbalaji,… pic.twitter.com/YKiwdWOF1d