புஷ்பா பட பாணியில் தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது - உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் விமர்சனம்..!
நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,
பெரும்பாலான மக்கள் இந்த ஆட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. "தவெக ஆட்சி அமைக்க வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை.தவெகவுக்கு 1.72 கோடி மக்கள் தான் வாக்களித்துள்ளனர். எதிராக 3.21 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர்.திருப்பத்தூர் எம்எல்ஏ வாக்கெடுப்பில் பங்கேற்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தவெகவுக்கு 106 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எங்களது கூட்டணியில் வெற்றி பெற்றவர்களிடம் ஆதரவு பெற்றே இந்த ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. அதில் ஒரு தரப்பினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பிளவுபட்ட ஒரு தரப்பினர் வீட்டுக்கு புது சோபா செல்கிறது. தொடர்ந்து அங்கு முதல்வர் செல்கிறார். புதுமையான ஆட்சி தருவார் என்று பார்த்தால் புஷ்பா திரைப்பட பாணியில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த அரசு எத்தனை நாளைக்கு நீடிக்கப் போகிறது என்று மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் இந்த ஆட்சி நடைபெறுகிறது.
இந்த அரசு நல்லாட்சித் தரும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர்.கூவத்தூரையும் மிஞ்சும் வகையில் கூத்துகளை இந்த அரசு அடிக்கிறது. எங்களது முந்தைய நலத்திட்டங்களை இந்த அரசு தொடர வேண்டும். 15-ந் தேதி 1000 ரூபாய் வரும் என கோடிக்கணக்கான பெண்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.நீங்கள் பதவியேற்றபோது அவகாசம் வேண்டும் என்று சொன்னீர்கள். அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் காத்திருக்கும் அனைவரையும் நீண்ட நாள் காத்திருக்க வைக்க வேண்டாம்.என கூறி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறோம் என கூறி வெளியேறினர்
#WATCH | "புஷ்பா பட பாணியில் இந்த ஆட்சி நடக்கிறது" -உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்#SunNews | #TNAssembly | @Udhaystalin pic.twitter.com/DoJuwBc9QU
— Sun News (@sunnewstamil) May 13, 2026

