வாலிபால் வேர்ல்ட் பீச் ப்ரோ டூர் போட்டி - துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் வடநெம்மேலியில் நடைபெற்ற வாலிபால் வேர்ல்ட் பீச் ப்ரோ டூர் போட்டியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் வடநெம்மேலியில் நடைபெற்ற வாலிபால் வேர்ல்ட் பீச் ப்ரோ டூர் போட்டியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்ததாவது, வாலிபால் வேர்ல்ட் பீச் ப்ரோ டூர் 2024 சென்னை சேலஞ்ச் போட்டியை இன்று துவக்கி வைப்பதில் நான் பெருமை அடைகின்றேன். உலகம் முழுவதிலுமிருந்து சென்னைக்கு வந்துள்ள அனைத்து விளையாட்டு வீரர்கள், விளையாட்டு அலுவலர்கள் மற்றும் பார்வையாளர்களை நான் மிகவும் அன்புடன் வரவேற்கிறேன்.
தி வேர்ல்ட் பீச் ப்ரோ சேலஞ்ச் போட்டியானது உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை ஒன்றிணைத்து, மிகவும் உற்சாகமான மற்றும் வேகமான விளையாட்டுகளில் ஒன்றான பீச் வாலிபால் மூலம் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறது. நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் திறமையான தலைமையின் கீழ் தமிழ்நாடு அரசு பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது என கூறினார்.