மெரினா நீச்சல் குளத்தை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

 
மெரினா நீச்சல் குளத்தை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Image

இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை மெரினா கடற்கரையில் பலரும் விரும்பிச்செல்லும் நீச்சல் குளத்தைக் கழக அரசு ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதுப்பொலிவுடன் மேம்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன நீச்சல் குளத்தை இன்று திறந்து வைத்து, நீச்சல் பயிற்சியையும் தொடங்கி வைத்தோம். அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்ட பின்னர் பாதுகாப்பிற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அதிகாரிகளை அறிவுறுத்தினோம். மேலும், இப்புதிய நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கான இணையவழி முன்பதிவினையும் தொடங்கி வைத்து வாழ்த்தினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.