கமல்ஹாசனுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களை சீட் ஒதுக்கப்பட்டது. இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று, அரசியல், கலை என பல்வேறு துறை சார்ந்த கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். கமல் சாருக்கு என் அன்பும் நன்றியும் என கூறினார்.


