மேடையிலேயே கண் கலங்கிய உதயநிதி ஸ்டாலின்..!

 
1 1

திமுக 75ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் திமுக  இளைஞர் அணி சார்பாக ‘அறிவுத் திருவிழா’ சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் ‘காலத்தின் நிறம் கருப்பு, சிவப்பு’ நூலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட  பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக் கொண்டார். 

இந்த நிகழ்வில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசும்போது, “திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆம் ஆண்டு பயணத்தை நினைவு கூறக்கூடிய இந்த விழாவிற்கு ‘அறிவு திருவிழா’ என உதயநிதி பெயர் வைத்திருக்கிறார். இதைவிட பொருத்தமான தலைப்பு வேறு இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.


முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு 1967 ஆம் ஆண்டு முதல் மாநில கட்சியாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த கட்சியான திமுகவின் பல ஆய்வாளர்களும் ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். 

ஏதோ கட்சியை தொடங்கினோம்... அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று அறிவித்து நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. உலகத்தின் தலைவர்கள் முதல் கடை கோடி தொண்டர்கள் வரை சுற்றி சுழன்று பணியாற்றினார்கள்.  18 ஆண்டுக உயிரைக் கொடுத்து ஒவ்வொருத்தரும் உழைத்தார்கள். எத்தனை பத்திரிகைகள், எத்தனை புத்தகங்கள், எத்தனை கூட்டங்கள், எத்தனை கொள்கை வகுப்பெடுப்புகள், நாடகங்கள் எத்தனை போராட்டங்கள், எத்தனை சிறை வாசங்கள், எத்தனை தியாகங்கள், எத்தனை துரோகங்கள்.. திமுக உழைத்த உழைப்பு சாதாரண உழைப்பல்ல. சமூகத்தில் சரி பாதி மக்கள் படிப்பறிவு கூட இல்லாத காலகட்டத்தில் குக்கிராமத்தில் முடி திருத்தும் மையம் கூட மக்களின் சிந்தனைகளை திருத்தும் மையமாக செயல்பட்டது. 

வரலாறு பற்றி தெரியாத சிலர் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள் இன்னும் சில அறிவிலிகள் திமுகவை போல் வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கிறார்கள். திமுகவைப் போல் வெற்றி பெற திமுக போல் உழைப்பும் அறிவும் தேவை. ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு திமுக தான்.

திமுக 75ஆம் ஆண்டு விழா மேடையில் முதல்வர் பேச பேச, உணர்ச்சி வசப்பட்டு துணை முதல்வர் உதயநிதி ஆனந்த கண்ணீர்.

வள்ளுவர் கோட்டத்துல நின்னு சொல்றேன். தம்பி உதயநிதியோட கொள்கைப் பிடிப்பு மிக்க செயல்பாடுகளை பார்க்கும்போது, 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி' என்ற குறளுக்கேற்ப அவர் செயல்படுகிறார்.. அந்த பெருமையோடு அவருக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். இது என்னுடைய அன்பு கட்டளை என்று கூட சொல்லலாம். இந்த அறிவு திருவிழாவை இத்தோடு நிறுத்த மல் தொடர்ந்து ஆண்டுதோறும் நீங்கள் நடத்திட வேண்டும் நிச்சயம் இளைஞர் சிறப்பாக நடத்தும் என்றநம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு எனக் கூறினார். இத பெருமையோடு சொல்கிறேன் என்று ஸ்டாலின் பேசும்போது, உணர்ச்சி மிகுதியில் உதயநிதி கண்ணீர்விட்டார்.