வ.உ.சிதம்பரனாரின் தியாக வாழ்வை என்றும் போற்றி வணங்குவோம் - உதயநிதி ஸ்டாலின்

 
udhayanidhi udhayanidhi

செக்கிழுத்த செம்மல் அய்யா வ.உ.சிதம்பரனாரின் தியாக வாழ்வை என்றும் போற்றி வணங்குவோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் வ.உ.சிதம்பரனாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 


விடுதலைப் போராட்டக் களத்தில் இருந்து எந்த நிலையிலும் விலகாத தியாகத் திருவுருவம் - ஆதிக்கவாதிகளுக்கு எதிராக கப்பலோட்டிய தமிழர் - சமூகநீதியை நிலைநாட்ட தந்தை பெரியாரே நமக்கு வழிகாட்டி என உரைத்தவர் செக்கிழுத்த செம்மல் அய்யா வ.உ.சிதம்பரனார் அவர்கள். அவரது தியாக வாழ்வை என்றும் போற்றி வணங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.