அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

 
tnt

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

udhayanidhi

திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.  திமுக இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1977 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பிறந்தவர் . சினிமாவில் ஆர்வம் காட்டி வந்த இவர் பின்னர் தனது கவனத்தை அரசியல் பக்கம் திருப்பினார்.  2019 ஆம் ஆண்டு நடந்த பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்து கட்சி தொண்டர்களிடையே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.  2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாநில சுயாட்சியின் மறுவடிவம், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவிடத்தில், என் பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர்கள் - கழக நிர்வாகிகளுடன் இன்று மலர் தூவி மரியாதை செய்தோம். மாநில உரிமை காக்க அண்ணா வழியில் அயராது உழைப்போம்.


நம் அரசியல் வாழ்விற்கு அரிச்சுவடியாகத் திகழும், நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய நினைவிடத்தில், என் பிறந்த நாளையொட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினோம். கலைஞர் அவர்கள் வழியில் தமிழ்நாட்டின் மேன்மைக்காக என்றும் உறுதியோடு உழைக்க உறுதியேற்றோம். #கலைஞர்100 என்று குறிப்பிட்டுள்ளார்.