நான் பதில் சொல்லும்போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருப்பதில்லை - உதயநிதி பேச்சு

நான் பதில் சொல்லும்போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருப்பதில்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பேசினார். அவசர பணியாக டெல்லி சென்று திரும்பிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் ஒரு தடவை கூட தான் சட்டப்பேரவையில் பதில் கூறும் போது இருப்பதில்லை. "நான் பதில் சொல்லும்போதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருப்பதில்லை. தொடர்ந்து பார்த்துட்டுதான் இருக்கேன்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக எனது காரை எடுத்துச் செல்ல முயன்றார். நானும் ஒன்றும் பிரச்சனை இல்லை எடுத்து செல்லுங்கள் ஆனால் கமலாலயம் பக்கம் சென்று விடாதீர்கள் என்று கூறினேன். அப்போது ஓ.பன்னீர்செல்வம், எங்களது கார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைக்கு தான் செல்லும் என கூறினார். ஆனால் தற்போது டெல்லியில் 3 கார்கள் மாறி சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி என கூறினார்.