"பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞரின் மாணவன் என சொல்வதில் பெருமை"- உதயநிதி ஸ்டாலின்
பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞரின் மாணவன் என்று சொல்வதில் எப்போதும் பெருமை கொள்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணைந்து 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கலையரங்கத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்சியில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் வில்சனின் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடி,சென்னை பெருநகர வளர்சி குழுமம் நிதி சேர்ந்து இந்த கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது, தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியை கல்வி மற்றும் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் செலவிட்டு வருகிறார்,நானும் மாணவன் தான்நான் பெரியார், அம்பேத்கார், அண்ணா, கலைஞரின் மாணவன், கல்லூரி வாழ்க்கை எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல கல்வியும் முக்கியம் அதில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்,இந்த கல்லூரியின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 8 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது, இங்கு பலர் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருக்கிறீர்கள். உங்களுக்கு கல்வி கிடைக்க பெரியார், அம்பேத்கார், அண்ணா, கலைஞர் போராட்டமும் உழைப்பும் உள்ளது, அதை நினைத்து நீங்கள் படிக்க வேண்டும்.இங்கு அதிகமான அளவுஸமாணவிகளை பார்க்கும் போது உங்கள் பெற்றோரை நினைத்து மகிழ்சியாக உள்ளதுபெண் கல்வி ஓட்டு மொத்த சமுதாயத்திற்கு உதவியாக அமையும், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பள்ளிக்கல்வி முடிக்கும் மாணவர்களில் தமிழ்நாட்டில் 75 சதவீதம் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்து வருகின்றனர், அதை 100 சதவீதமாக உயர்த்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ் புதல்வன், புதுமை பெண் திட்டத்தில் 8 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர்,நான் முதல்வன் திட்டத்தில் இந்த கல்லூரியில் 1000 மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டு 400 மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியில் சேர்ந்துள்ளனர். விளையாட்டு உங்கள் மன நலன் அறிவு வளர்ச்சிக்கு உதவும், இந்த கல்லூரி மாணவர் ஆகாஷ் boxingல் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார், உங்கள் முன்னேற்றத்திற்கு நம் அரசு துணை நிற்கும்,இங்கு 262 மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர்.உங்கள் எதிர் காலம் சிறப்பாக அமையட்டும் என்று கூறினார். இந்த நிகழ்சியில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி செழியன்,நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த நிகழ்சியில் கலந்துகொண்டனர்.


