ஒன்றிணைந்து செயல்படுவோம்...மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - உதயநிதி ஸ்டாலின்!

 
udhayanidhi udhayanidhi

காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற மதவெறி, இன்று நாட்டின் மத நல்லிணக்கத்தை நோக்கி தனது துப்பாக்கியை நீட்டுகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளான இன்று, கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களின் அறிவுறுத்தலின்படி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது, சக அமைச்சர் பெருமக்கள் - கழக மூத்த நிர்வாகிகளுடன் பங்கேற்று மத நல்லிணக்க உறுதிமொழியை எடுத்துக் கொண்டோம்.


காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற மதவெறி, இன்று நாட்டின் மத நல்லிணக்கத்தை நோக்கி தனது துப்பாக்கியை நீட்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் மத நல்லிணக்கத்தை காக்கும் கவசமாக இருக்க வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை உணர்ந்து ஒன்றிணைந்து செயல்பட இந்நாளில் உறுதியேற்போம். மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என குறிப்பிட்டுளார்.