பிரதமர் மோடியை சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.. எப்போ தெரியுமா??

 
Udhayanidhi

பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  நாளை காலை 11 மணிக்கு சந்திக்க உள்ளார்.

அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.  திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,  கடந்த டிசம்பர் மாதம்  தான்  தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.  அதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அவர், முதன் முறையாக 2 நாள்  பயணமாக டெல்லி சென்றிருக்கிறார்.  

udhayanidhi stalin

  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மாணவர்களை சந்தித்து பேசும் அவர்,  பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழாவில்  உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.  அவரது  டெல்லி பயணத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தொடர்ந்து தனது துறை ரீதியான கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களை அவர் சந்தித்து பேச இருக்கிறார்.   மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியை நாளை சந்திக்க உதயநிதி ஸ்டாலின் நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   அதன்படி  நாளை காலை 11 மணிக்கு சந்திக்க பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார்.