விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - உதயநிதி 2 நாட்கள் பிரச்சாரம்!!

 
udhayanidhi udhayanidhi

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் வரும் ஜூலை 7, 8 ஆகிய நாட்களில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

udhayanidhi

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விக்கிரவாண்டி தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக வரும் 7.8 ஆகிய தேதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.


7, 8 ஆகிய தேதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் 7ஆம் தேதி : திருவாமத்தூர், காணை, பனமலைப்பேட்டை, அன்னியூர். 8ஆம் தேதி : தும்பூர், நேமூர், ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல்பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.