“தொடர் உழைப்பு, முயற்சி, ஒழுக்கம் இருந்தால் எதையும் கற்றுக்கொள்ளலாம்”- மாணவர்களுக்கு உதயநிதி அட்வைஸ்

 
திமுகவை அழிப்பேன் என்று கிளம்பி உள்ளவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்- உதயநிதி ஸ்டாலின் திமுகவை அழிப்பேன் என்று கிளம்பி உள்ளவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்- உதயநிதி ஸ்டாலின்

தொடர் உழைப்பு, முயற்சி, ஒழுக்கம் என இந்த மூன்றும் இருந்தால் மாணவர்கள் எந்த திறனையும் கற்றுக்கொள்ள முடியும் என்று பதக்கங்கள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் தமிழ்நாடு திறன் போட்டி 2025 - ல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். தொடர் உழைப்பு, முயற்சி, ஒழுக்கம் இருந்தால் தான் புதிய திறனை கற்று கொள்ள முடியும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கலைஞர் அவர்கள் தான். கலைஞர் அவர்கள் முதன் முதலில் எழுதிய மாணவன் நேசன் என்னும் பத்திரிகை தான் முரசொலி பத்திரிக்கையாக வந்தது. தொடர்ந்து பத்திரிக்கைகள் படிப்பது, தொடர்ந்து எழுதி கொண்டு இருப்பது தான் அவரது வழக்கமாக இருந்தது. மேலும் தனது கடைசி காலம் வரை சமூக ஊடங்களில் மூலமாகவும் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை படித்து வந்தவர் கலைஞர்.

தமிழகத்தில் பேனா என்று சொன்னால் அது கலைஞர் தான். அரசியலில் எதிரிகள் மாறி மாறி வந்தார்கள், ஆனால் கலைஞர் ஒருவர் தான் நிலையாக இருந்தார். நான் முதல்வன் திட்டம் எந்த அளவிற்கு வெற்றி அடைந்து உள்ளது என்பதற்கு எடுத்துகாட்டு நீங்கள் தான்ம் உங்களை பார்த்ததில் அது தெரிகிறது. அடுத்தடுத்து போட்டிகளில் கலந்து கொள்ள மாணவர்கள் தயாராக உள்ளனர். நான் முதல்வன் திட்டத்தில் 1200  மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் பல மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற உள்ளனர். முன்னணி நிறுவனங்களுக்கு மாணவர்கள் பயிற்சிக்கு செல்கின்றனர். பள்ளி படிப்பும், கல்லூரி செல்வதே பிற மாநிலங்களில் கனவாக இருக்க கூடிய நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த கட்ட வளர்ச்சிகளை தமிழக மாணவர்கள் அடைந்து வருகிறார்கள். தமிழகத்தில் UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் மூலம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. கடந்தாண்டு தமிழகத்தில் 59 மாணவர்கள் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர். வேலையில் சேருவது மட்டும் அல்ல, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சூழலை மாணவர்கள் உருவாக்கும் சூழல் அமைத்துள்ளது” என்றார்.