எடப்பாடி பழனிச்சாமி குறித்து நான் அவதூறாக எதுவும் பேசவில்லை- உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் ஈபிஎஸ்-யை நான் தரக்குறைவாக பேசவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

உதயநிதி ஸ்டாலின்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் குறித்து அண்ணல் அம்பேத்கர், பெரியார், கலைஞர், நமது எழுச்சித்தமிழர் அண்ணன் திருமாவளவன், ஆ.ராசா அவர்கள் எல்லாம் பேசாதது ஓன்னும் நான் பேசவில்லை. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவேண்டும். மணிப்பூர் மாநிலம் 5 மாநிலமாக பற்றி எரிக்கிறது. அங்கு 300 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மணிப்பூரில் ஏராளமான தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இணைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சிஏஜி வெளியிட்டுள்ள ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஒரே நாடு, ஒரே தேர்தல் போன்ற பிரச்சனைகளை கிளப்புவதா?


எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை நான் தரக்குறைவாக பேசவில்லை. சனாதனத்திற்கு எதிராக பேசுவதை அவ்வாறு எடுத்துக் கொள்கிறாரா? என தெரியவில்லை. ஒருவேளை நான் சனாதனம் குறித்து பேசியதால் அவருடைய மனம் சிரமப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். கொசுவர்த்தி சுருள் பதிவு தொடர்பாக பார்ப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளாலாம்” எனக் கூறியுள்ளார்.