இது ஒரு கடினமான நேரம் ,மழை என்பது இயற்கையானது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 
udhayanidhistalin udhayanidhistalin

மிக்ஜாம் புயல் -கனமழை பெய்துவரும் நிலையில்  சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

Image

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். இது ஒரு கடினமான நேரம் ,மழை என்பது இயற்கையானது. மழை நின்ற அடுத்த 2 மணி நேரங்களில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்” என்றார். 

Image

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வருகிறது. சென்னைக்கு வடகிழக்கே சுமார் 90 கி.மீ தொலைவில் ‘மிக்ஜாம்’ புயல் உள்ளது. இது தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகர்ந்து நாளை (டிச.5) முற்பகல் நெல்லூர்- மசூலிபட்டினம் இடையே தீவிர புயலாக கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.