ஒரே நாளில் மழையின் சுவடு இல்லாமல் ஆக்கியது திமுக அரசு- உதயநிதி ஸ்டாலின்

 
 “ஆளுநருக்கு எவ்வளவு கொழுப்பு? திமிரு?.. நீங்க வெறும் போஸ்ட் மேன்” - துணை முதல்வர் உதயநிதி காட்டம்..   “ஆளுநருக்கு எவ்வளவு கொழுப்பு? திமிரு?.. நீங்க வெறும் போஸ்ட் மேன்” - துணை முதல்வர் உதயநிதி காட்டம்.. 

மழை பெய்த ஒரே நாளில் அதன் சுவடு இல்லாமல் ஆக்கியது திமுக அரசு என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை தொடருக்காக, ரூ. 83 கோடி ஒதுக்கீடு செய்து, 36 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, சுமார் 2 மடங்கு அதிகரித்து 11 லட்சமாகி இருக்கிறது. இது தான், முதலமைச்சர் கோப்பையின் வெற்றி. அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் 3% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறோம்.  முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் 38 மாவட்டங்களில் கடந்த ஆண்டு சேலம் மாவட்டம் 19வது இடத்தில் இருந்த நிலையில், விளையாட்டு வீரர்களின் உழைப்பால் சேலம் மாவட்டம் தற்போது 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. முறையான பயிற்சி செய்து விளையாடினால் முதல் இடத்திற்கு முன்னேறலாம். 

மழை பெய்த ஒரே நாளில் அதன் சுவடு இல்லாமல் ஆக்கியது திமுக அரசு. நான்கு மாதங்களாக தொடர் ஆய்வு நடத்தி வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றி இருக்கிறோம். அடுத்துவரும் மழை நாட்களில் மக்களை காக்கின்ற பணிகள் தொடரும். எல்லோருக்கும் எல்லாம் என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால் மக்களால் பலமுறை நிராகர்க்கப்பட்ட அக்கா தமிழிசைக்கு கோபம் வரத்தான் செய்யும்” என்றார்.