திமுக அரசின் திட்டங்களால் பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல்- உதயநிதி ஸ்டாலின்

 
Udhayanidhi

இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த திமுக அரசின் திட்டங்களால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin

நாகையில் திமுக மீனவர் அணி மாநில துணைச் செயலாளர் அக்கரைப்பேட்டை மனோகரன் இல்ல திருமண விழாவில் திமுக இளைஞரின் செயலாளர் தமிழக துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை  நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். 

அப்போது பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “பெண்கள் உயர்கல்வி படிக்க தமிழக முதல்வர் கொண்டுவந்த புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் அமைந்துள்ளன. அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல  கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். அத்திட்டத்தில் யமாதம் மாதம் 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைகின்றனர். இதனை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்று எரிச்சல். எப்படியாவது திமுக கூட்டணி உடையாதா? என்று எடப்பாடி எதிர்பார்க்கிறார். வருகின்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை பலமாக அமைக்கும். சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளை வெற்றிபெற அனைவரும் உழைக்க வேண்டும்” என்று பேசினார்.